Saturday, August 6, 2016

பெற்றோர்கள் கவனிக்க. சிறுவர்களுக்கான mail சேவை.

இணையத்தளத்தில் சிறுவர்களுக்காக பிரத்யேக மின்னஞ்சல் சேவை அறிமுகமாகி உள்ளது.
மெயிலி என்னும் பெயரிலான அந்த சேவையை பார்த்ததுமே சிறார்களுக்கு பிடித்து போகும். பெற்றோர்களுக்கும் பிடித்து போகும்.
சிறார்களுக்கு ஏன் பிடிக்கும் என்றால், இந்த சேவை அந்த அளவுக்கு வண்ணமயமானதாக இருக்கிறது.
ஜிமெயில், பழைய ஹாட்மெயில் போல் எல்லாம் இதில் டைப் செய்து கொண்டிருக்க வேண்டாம். தூரிகைகளை கொண்டு வரையலாம். எழுதலாம். அதற்கு வண்ணமயமான பின்னணியை தெரிவு செய்து கொள்ளலாம்.
ஆம் சிறுவர்கள் இதில் உள்ள தூரிகையை பயன்படுத்தி வண்ணமயமான சித்திரங்களை வரைந்து வண்ண பென்சிலால் வாசகங்களை எழுதலாம். அப்படியே இதில் உள்ள கமெரா மூலம் படங்களையும் கிளிக் செய்து சேர்த்து கொள்ளலாம். அதன் பிறகு அழகான பின்னணியில் இருந்து பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ளலாம்.
சிறுவர்கள் தங்களுக்கான இன்பாக்சையும் பெற்று கொண்டு அதில் அப்பா, அம்மா, தங்கை, தம்பி போன்றோரை சேர்த்து கொள்ளலாம். இந்த மின்னஞ்சலில் இருந்து அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மின்னஞ்சல் அனுப்பி மகிழலாம்.
இந்த மின்னஞ்சலை பெற்றோர்கள் உருவாக்கி கொடுத்து தங்கள் மேற்பார்வையிலேயே வைத்திருக்கலாம். அதாவது குழந்தைகள் யாருக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர் என்பதையும் என்ன செய்தியை அனுப்புகின்றனர் என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கலாம். எனவே இந்த மின்னஞ்சல் மிகவும் பாதுகாப்பானது.
சிறுவர்களுக்காக மின்னஞ்சலை மறு உருவாக்கம் செய்திருக்கிறோம் என பெருமை பட்டு கொள்ளும் மெயிலி சேவை அருமையானது என்பதில் சந்தேகமில்லை.

நன்றி -ஆந்தை ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment